தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமுதி டிரைவர் கொலை; கைதான நபருக்கு மாவு கட்டு.. என்ன நடந்தது? - Aruppukottai DSP Issue - ARUPPUKOTTAI DSP ISSUE

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மினி வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது தவறி கீழே விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட காளீஸ்வரன்
கைது செய்யப்பட்ட காளீஸ்வரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 6:34 AM IST

விருதுநகர்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியைச் சேர்ந்தவர் காளிக்குமார் (33). இவர் மினி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (செப்.2), காளிக்குமார் மினி வேனில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்து அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் காளிக்குமார் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த காளிக்குமார், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.‌

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (24), அருண்குமார் (22), காளீஸ்வரன் (22)‌ மற்றும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.‌

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் திருச்சுழி அருகே அம்பனேரி பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கைது செய்யப்பட்ட நபர்களில் காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காளீஸ்வரன் கை முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலீசார் அவரை மீட்டு, திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அவரது கையில் மாவு கட்டு போட்டனர். அதன் பின்னர் காளீஸ்வரன் உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது ஆக்ரோஷ தாக்குதல்; ஏழு பேர் கைது - ஒருவர் தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details