தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சியம்மன் கோயில்; அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு! - priests Training Admission

priests Training Admission Notification: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருவதாக கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் (Credits - Minister P K Sekar Babu X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:55 PM IST

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளி, அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருவதாக கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக கோயில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படியும் 2024-2025ஆம் ஆண்டுக்கான ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பிலும் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிலும் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியுடன் மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இவ்விரு பயிற்சிகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், இந்து சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், தமிழ் எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோருக்கான வயது தகுதி 13 முதல் 20 ஆகவும், அர்ச்சகர் பயிற்சி பெற விரும்புவோர் வயது தகுதி 14 முதல் 24 ஆகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணை ஆணையர் அல்லது செயல் அலுவலர், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை என்ற முகவரிக்கு ஜூலை 19ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள அலுவலக நேரத்தில், அலுவலக நாட்களில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"ரயில் பெட்டிகள் சரியான பராமரிப்பு இல்லாததற்கு தனியார்மயமே காரணம்" - SRMU நிர்வாகி குற்றச்சாட்டு! - railway maintenance issue

ABOUT THE AUTHOR

...view details