தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டி கேட்டவரின் மூக்கை கடித்து துப்பிய நபர்.. பல்லும் பறிபோனது.. வேலூரில் பகீர் சம்பவம்! - NEIGHBORS FIGHT

வேலூரில் மழைநீர் வீட்டின் அருகே தேங்கியதால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை கடித்துக் குதறிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்
பாதிக்கப்பட்ட நபர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 6:00 PM IST

வேலூர்: மாவட்டம், திருவலம் காரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். நேற்று முன்தினம் பெய்த மழையால் இவர் வீட்டு முன்பு மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக மண்ணை கொட்டி மேடாக்கியுள்ளார். இதனால் பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் என்பவருக்கும் பரசுராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, பரசுராமனை ரமேஷ் ஆக்கி மட்டையால் தலையில் தாக்கியுள்ளார். பரசுராமனை அடிப்பதை பார்த்த தம்பி தமிழரசன் ஓடி வந்து தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது ரமேஷ் தமிழரசனின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட மூக்கை பிடித்து கொண்டு நின்ற தமிழரசனை ரமேஷின் தம்பி அருள் வாயில் பலமாக குத்தியுள்ளார்.

அதில் தமிழரசனின் பல் உடைந்து தரையில் சிதறி உள்ளது. பின்னர் இதுகுறித்து பரசுராமன் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட திருவலம் எஸ்ஐ பால வெங்கட்ராமன் காயமடைந்த இருவரையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:"எங்கள் கைகளால் தான் மழைநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டி இருக்கு" - தூய்மைப் பணியாளர்கள் வேதனை!

அங்கு பரசுராமனுக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. கடிபட்ட தமிழரசனின் மூக்கின் பகுதியினை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவலம் எஸ்ஐ பால வெங்கட்ராமன் ரமேஷ் மற்றும் அருள் உள்ளிட்வர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சாதாரண சண்டையில் பல்லை உடைத்து மூக்கை கடித்து துப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details