தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அருகே தர்பூசணி பறிக்கச் சென்ற விவசாயி யானை தாக்கி பலி! - elephant attacked by farmer - ELEPHANT ATTACKED BY FARMER

A Farmer Died Attacked By An Elephant: பவானிசாகர் வனத்தையொட்டி உள்ள சுஜ்ஜல்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தர்பூசணி பறிக்கச் சென்ற இடத்தில் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

யானை, உயிரிழந்த விவசாயி புகைப்படம்
யானை, உயிரிழந்த விவசாயி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 6:05 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனத்தையொட்டி உள்ள சுஜ்ஜல்குட்டை கிராமத்தில் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்கிராமத்தில் தர்பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது இங்குள்ள விவசாயிகள் யானைகள் நடமாடும் இடத்தில், தர்பூசணியை பயிரிட்டு அதனை அறுவடை செய்து வருகின்றனர். மேலும், தர்பூசணியை பாதுகாப்பதற்காக விவசாயிகள் அங்கேயே தங்கிப் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், சுஜ்ஜல்குட்டையைச் சேர்ந்த வெங்கடாசலம் உட்பட 4 பேர் யானை முந்தி விநாயகர் கோயில் என்ற இடத்தில் அறுவடைக்காக தயாராக இருந்த தர்பூசணியை பறித்து அதனை டெம்போவில் ஏற்றி முடிப்பதற்குள் நள்ளிரவு ஆகி விட்டதென்பதால் அங்கேயே 4 பேரும் படுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன்.15) அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டுயானை தர்பூசணி காட்டுக்குள் நுழைந்துள்ளது. யானைப் பார்த்த வெங்கடாசலம் சத்தம் போட்டு ஓடி டெம்போவில் ஏற முற்பட்டுள்ளார். அதற்குள் யானை அவரை தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் டெம்போவில் ஏறி தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் பகல் நேரத்தில் அறுவடை பணியை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யானை தாக்கியதில் உயிரிழந்த வெங்கடாசலம் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கிராமமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை - திருப்பதி ஆன்மீக சுற்றுலா! சுற்றுல்லாத்துறை சூப்பர் அறிவிப்பு வெளியீடு! - Chennai to Tirupathi Tour package

ABOUT THE AUTHOR

...view details