சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், நேற்று(அக்.20) இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த போலீசார் சிலம்பரசன் அவர்களை வீட்டிற்கு கிளம்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது அந்த இருவரும் போலீசாரை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மிரட்டியுள்ளனர். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பிடித்தனர். பின்னர் மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :"அதிமுக சீனியர்களை முந்தி பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி" - உதயநிதி பதிலடி!
அந்த விசாரணையில் போலீசாரை அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியது வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரின் பெண் தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு பேர் மீதும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்