சென்னை:சென்னை கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் செல்வம் - சங்கீராணி தம்பதியினர். இவரது மகள் பிரெஸ்லி ஷிக்கைனா. இவர் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் ஓவிய கலை மீது ஆர்வம் கொண்டவர். எனவே அதில் சாதனை படைக்க விரும்பியதால், பிரதமர் மோடியின் புகைப்படத்தை வரைய பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நாளை (செப்.17) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 600 சதுர அடியில் சிறுதானியம் மூலம் பிரமாண்டமான பிரதமர் மோடியின் உருவத்தை மாணவி பிரெஸ்லி ஷிக்கைனா வரைந்துள்ளார். சுமார் 800 கிலோ சிறுதானியஙகளை கொண்டு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை என 12 மணி நேரம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.