திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 2017-18ஆம் ஆண்டு வந்தவாசி, ஜவ்வாது மலை ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சி ஆகிய ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
சாதி கணக்கெடுப்பு 2011 பட்டியலில் இடப்பட்ட பயனாளிகளின் உண்மைத் தன்மை மற்றும் மேற்பார்வையின் போது குறிப்பாக 2017-18ஆம் ஆண்டுகளில் ஜவ்வாது மலைப்பகுதி வீரப்பனூர் ஊராட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கும், இறந்துவிட்ட பயனாளிகளுக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக லோக் ஆயுக்தாவில் அப்போதைய ஆரணி தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த போது இந்த திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது உண்மை எனத் தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.