சென்னை: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன் (24). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரை தேனாம்பேட்டையை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீஷா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை ஸ்ரீசா உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மணிகண்டனுடன் அவரது தாய் ரேவதி மற்றும் ஸ்ரீஷா மூன்று பேரும் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்த ஸ்ரீஷா மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.