சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் கடத்திவரப்படும் பொருட்கள் குறித்தான சோதனை நடைபெற்றது. அதில் தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் வண்டியில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடையில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நேற்றைய தினம் துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் வீசப்பட்ட சூட்கேஸில் பெண் சடலம் இருந்த நிலையில், பதறிப் போன பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் சூட்கேஸில் என்ன உள்ளது என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.