தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தீர்களா? அக்டோபர் மாத பரிசு லிஸ்ட் தயார்.. உங்களுடைய பெயர் இருக்கிறதா? - ONLINE BOOKING PROGRAM

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக, அரசு பேருந்துகளில் அக்டோபர் மாதத்தில் வார நாட்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் பரிசுக்கு உரிய 13 பேரின் லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி , பேருந்து
போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி , பேருந்து (Photo Credits - ArasuBus 'X' page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 6:44 PM IST

சென்னை:தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக, அரசு பேருந்துகளில் அக்டோபர் மாதத்தில் வார நாட்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் பரிசுக்கு உரிய 13 பேரின் லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக, அரசு பேருந்துகளில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு பேருந்துகளில் வார நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இதில் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் தேர்வு செய்யப்பட்ட 13 பேரை போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். அதில், தேர்வு செய்யப்பட்ட 13 பேரின் லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேரை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, 3 பேருக்கு 10 ஆயிரமும், 10 பேருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர்-2024 மாதத்திற்கு 13 பயணிகளை இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டிகணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளார்.

வ.எண் பயணச்சீட்டு (PNR) எண் பயணியின் பெயர் ரொக்கப்பரிசு (ரூபாய்)
1 T60481762 உமா மகேஷ்வரி ரூ.10,000
2 U60235013 ஸ்ரீசுதீஷ்னா ராம் டி ரூ.10,000
3 Y60003149 சேதுராமன் ரூ.10,000
4 B59729614 சிந்தனையாளன் ரூ.2,000
5 L59414394 தினேஷ் குமார் ரூ.2,000
6 L60357886 விஜயகுமார் ரூ.2,000
7 N59965314 கணேஷ் ரூ.2,000
8 N60203826 வருண்குமார் எம் ரூ.2,000
9 R60263704 ஏ. சேக் அப்துல்லா ரூ.2,000
10 T58172398 பிரபு ரூ.2,000
11 T58902802 ஜெபரின் ஜெ ரூ.2,000
12 T60182465 ஸ்வேதா ரூ.2,000
13 Y60065367 ராதாகிருஷ்ணன் பி ரூ.2,000

அக்டோபர்-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும். இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details