ஹராரே:சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது. டியான் மையர்ஸ், கிளைவ் மதாந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவிற்கு ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 116 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்க, வந்த வேகத்தில் அபிஷேக் அவுட் ஆக ருதுராஜ் கெய்க்வாட் களம் கண்டார். ஆனால், அவரும் நீடிக்கவில்லை. சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சரியாக விளையாடமால் தங்களது விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது. 5 ஓவர் முடிவிற்கு 22-4 என்ற கணக்கில் விளையாடியது. களத்தில் துருவ் ஜுரல் - சுப்மன் கில் ஜோடி இருந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர். 10 ஓவர் முடிவிற்கு 43-5 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது.