தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு! - மும்பை டெல்லி

Women's Cricket Premier League 2024: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசனின் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு
பெங்களூரு

By PTI

Published : Feb 23, 2024, 8:19 PM IST

பெங்களூரு: மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் இன்று (பிப்.23) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இத்தொடரில் உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

இந்த நிலையில், இன்று (பிப்.23) நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் மும்மை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தற்போது இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

டெல்லி கேபிட்டல்ஸ்: ஷஃபாலி வர்மா, மெக் லானிங்(கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசானே கப், அனாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா(விகீ), ராதா யாதவ், ஷிகா பாண்டே.

மும்பை இந்தியன்ஸ்: ஹெய்லி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), யாஸ்திகா பாட்டியா(விகீ), அமேலியா கெர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரகர், ஷப்னிம் இஸ்மாயில், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சைகா இஷாக்.

இதையும் படிங்க:இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் புதிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details