டெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். இதை ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்தார். தற்போது இருவரும் விவாகரத்து செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இருவரும் வெவ்வேறு காரணங்கள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா மிகவும் பெருமை குணம் கொண்டவராகவும், திமிர் பிடித்தவராக காணப்பட்டதாகவும் நடாஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியாவின் குணாதிசியங்களை நடாஷாவால் தாங்க முடியவில்லை.
ஹர்திக் பாண்டியாவை மாற்ற நடாஷா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து மேலும் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவை மாற்ற முயற்சித்து தோல்வி கண்ட நிலையில் அவரது குணாதிசயங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால், உறவைத் தொடர்வது கடினம் என்று நடாஷா உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.