ஐதராபாத் : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த எங்கள் இதயங்களுடனும், பிப்ரவரி 15ஆம் தேதி, எங்கள் ஆண் குழந்தை அகாயை - வாமிகாவின் சிறிய சகோதரனை அவனது உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம், எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் தனி உரிமையை தயவு செய்து மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், அன்பும் நன்றியும்- விராட் கோலி மற்றும் அனுஷ்கா" என்று பதிவிட்டு உள்ளார்.