கிர்கிஸ்தான்: வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டி பிரமாண்டமாக தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதிச் சுற்று கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 18 எடை பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில், ஒவ்வொரு எடைப் பிரிவிலும் இறுதிப் போட்டியை எட்டக்கூடிய வீரர், வீராங்கனைகள் பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில், 50 கிலோ எடைப் பிரிவின் தகுதிச்சுற்று அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி, வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.