ETV Bharat / state

'ஜோடிக்கப்படும் வழக்குகள்'; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 18 பேர் மீதான குண்டாஸ் ரத்து! - KALLAKURICHI KALLA SARAYAM

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல், பெரும்பாலும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளையே மதுவிலக்கு காவல்துறை பதிவு செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு (கோப்புப்படம்)
கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 2:08 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 68 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சாராயம் காய்ச்சியவர், மூலப்பொருட்களை வாங்கியவர், தயார் செய்தவர் மற்றும் விற்பனை செய்தவர் என கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், கைதுக்கு முன்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு முறையாக ஆவணங்கள் வழங்கப்படாததால் சட்ட விரோதமாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: எத்தனை பேருந்துகள்; எந்தெந்த வழித்தடங்கள்?

கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினர். மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை எனவும், முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்வதாகவும் அவ்வாறு தவறிழிக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை எனவும், மாதவரத்தில் இருந்து வந்ததாகவும், இதற்கும் கல்வராயன் மலைக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என கூறினார். அத்துடன், 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 18 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.