தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் - மீண்டும் தக்கவைத்த டாடா குழுமம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா? - ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்

TATA Group: ஐபிஎல் தொடரின் 2024 - 2028 ஆகிய 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை டாடா குழுமம் 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 8:06 PM IST

Updated : Jan 22, 2024, 5:43 PM IST

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 17வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வாங்கப்பட்டார்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 2028ஆம் ஆண்டு வரை டாடா குழுமம் தக்க வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2 சீசன் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் இருந்து வந்த நிலையில், அதனை தற்போது ஒவ்வொரு ஆண்டுக்கும் 500 கோடி ரூபாய் என மொத்தம் 2,500 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் புதிப்பித்துள்ளது.

அதேபோல் உலகின் மிகப்பெரிய மகளிர் டி20 லீக்கான மகளிர் பிரீமியர் லீக்கின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பையும் டாடா குழுமமே வைத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது, "ஐபிஎல்லின் டைட்டின் ஸ்பான்சராக டாடா குழுமத்துடன் கூட்டாண்மையை அறிவிப்பத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும், இந்த ஐபிஎல் லீக்கானது, லீக் எல்லையை தாண்டி, திறமை உற்சாகம் மற்றும் பொழுதுபோக்கின் ஈடு இணையற்ற உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த நிதி அர்பணிப்பு உலக விளையாட்டு அரங்கில் ஐபிஎல் ஒரு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதேபோல் இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் கூறுகையில், "டாடா குழுமத்துடன் பயணப்பது என்பது ஐபிஎல்லின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். சாதனைக்குள்ளான இந்த 2500 கோடி மதிப்பிலான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விளையாட்டு உலகில் மற்றும் ஐபிஎல்லின் மீது வைத்திருக்கும் மதிப்பை காட்டுகிறது" என்றார்.

மேலும், இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு 2200 கோடிக்கு சீனாவின் மொபைல் நிறுவனமான விவோ வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது டாடா நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடி என 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 2500 கோடிக்கு 2024 - 2028 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேலோ இந்தியா: தமிழகத்திற்கு முதல் தங்கம்! யோகாவில் சாதித்த இரட்டையர்கள்!

Last Updated : Jan 22, 2024, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details