தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அதிகாரப்பூர்வமாக கிராண்ட் மாஸ்டர்.. வைரலாகும் தமிழக வீராங்கனை வைஷாலியின் எக்ஸ் பதிவு! - Chess Player Vaishali - CHESS PLAYER VAISHALI

Vaishali Rameshbabu: தமிழகத்தை சேர்ந்த வைஷாலி(22) அதிகாரப்பூர்வமாக 'செஸ் கிராண்ட்மாஸ்டர்' என அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

GRANDMASTER VAISHALI
GRANDMASTER VAISHALI

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 12:57 PM IST

சென்னை:இந்திய செஸ் வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த வைஷாலி(22) அதிகாரப்பூர்வமாக 'செஸ் கிராண்ட்மாஸ்டர்' என அறிவிக்கப்பட்டுள்ளார். செஸ் விளையாட்டு போட்டியில் கலக்கி கொண்டு வரும் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி, கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்று, 2021 ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை பெற்றார்.

இந்தநிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் 2 வெற்றிகளைப் பதிவு செய்து 2,501.05 'எலோ'புள்ளிகளை (Elo Rating) கடந்தார். ஆனால் அவருக்கு கிராண்ட்மாஸ்டர் எனப்படும் பட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வைஷாலி, ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் தமிழகத்திலிருந்து பங்கேற்றனர். இந்த தொடரில் டி.குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்த தொடரின் போது சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') கவுன்சில் கூட்டத்தில் வைஷாலிக்கு, கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கியது. இதன் மூலம் இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் வைஷாலி.

அதே போல் இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு அடுத்தாக 3வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் வைஷாலி கூறியதாவது,"எனது குடும்ப உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவால் என்னால் இது போன்று சாதிக்க முடிகிறது. சிறு வயதில் நானும் எனது தம்பி(பிரக்ஞானந்தா) ஆகிய இருவரும் செஸ் விளையாட்டு குறித்து நிறைய பேசுவோம், இது இன்னும் தொடர்கிறது.

பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவுடன் விரைவில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுவிடலாம் என நினைத்தேன், ஆனால் கரோனா காரணமாக நிறைய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்தார்.

இவருடைய விளையாட்டு திறனை அங்கீகரிக்கும் விதமாகக் கடந்த ஜனவரி மாதம் இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 'அர்ஜுனா விருதினை' வழங்கி கவுரவித்தார். அதே போல் 2,501.05 'எலோ' புள்ளிகளை பெற்று கிராண்ட்மாஸ்டருக்கான அங்கிகாரம் பெற்ற வைஷாலிக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை அப்போது தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் இருக்கும் சவால்கள் என்னென்ன? - நேத்ரா குமணன் பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details