டெல்லி:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களும், அக்சர் பட்டேல் 47 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து இலக்கை துரத்தி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. குறிப்பாக ஹென்ரிச் கிளெசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆரம்பம் முதலே அடித்து விளையாடிய ஹென்ரிச் கிளெசனை தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் ஹர்த்திக் பாண்டியா விக்கெட்டாக்கினார்.
இருப்பினும், அதிரடி மன்னன் டேவிட் மில்லர் ஆடுகளத்தில் இருந்தது இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. எந்த பந்தையும் லாவகமாக திருப்பி அதை பவுண்டரி அல்லது சிக்சராக மாற்றக் கூடிய அதிரடி ஆட்டத் திறன் டேவிட் மில்லர் உள்ளது என்பதால் அவரது விக்கெட்டை வீழ்த்த ஹர்த்திக் பாண்டியாவின் உத்வேகம் இந்திய அணிக்கு தேவைப்பட்டது.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்த்திக் பாண்டியா பந்துவீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அதை சிக்சருக்கு தூக்கி அடித்தார். அப்போது எல்லைக் கோடு அருகே நின்று கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ் அதை லாவகமாக பிடித்து, சாகசம் நிகழ்த்தினார்.
அதுவரை தென் ஆப்பிரிக்காவின் கைகளில் இருந்த போட்டி, இந்திய அணியின் பக்கம் திரும்பியது. ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் திருப்பு முனையாக சூர்யகுமாரின் கேட்ச் அமைந்தது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.
20 ஓவர் உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் இரு ஜாம்பவான்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என இருவரும் அறிவித்தது கோப்பையை வென்ற ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு சச்சின், தோனி, யுவராஜ், கம்பீர் பாராட்டு! - T20 World Cup Cricket Final