ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 66வது போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக போட்டியானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் எலிமினேட் ஆகிவிட்டது. மறுமுனையில் ஹைதராபாத் அணி இன்று ஒரு புள்ளி பெற்ற நிலையில், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேநேரம், 4வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.