ஐதராபாத் :காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் இணைந்து உள்ளார். விஜயகாந்த் வியஸ்காந்தை அவரது அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை 1 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில், இடது காலில் ஏற்பட்ட நாள்பட்ட வலி காரணமாக வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் என்பவரை சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு விஜயகாந்த் வியஸ்காந்தை ஒப்பந்தம் செய்து உள்ளதாக சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.