பல்லேகலே:இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 2வது டி20 கிரிக்கெட் போடியில் முறையே இந்திய அணி 43 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.30) பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். முன்னதாக பல்லேகலேவில் பெய்த மழை காரணமாக இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்: