பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரான்சில் தற்போது வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. கடும் உஷ்ணம் காரணமாக இந்திய வீரர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கடும் உஷ்ணத்தால் அவதிப்படும் இந்தியர்களுக்கு 40 கையடக்க ஏசிகள் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் 40 கையடக்க ஏசிகள் பிரான்ஸ் தூதரகம் மூலம் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இந்திய வீரர்களிடம் ஒப்பட்டைக்கப்பட்டு உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பாரீஸ் மற்றும் Chateauroux இடங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதில் Chateauroux பகுதியில் நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே உள்பட அனைவரும் வெப்பத்தால் அவதிக்குள்ளான சம்பவம் அரங்கேறியது.