ராஜ்கோட்:மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்மிரித் மந்தனா பெற்றார். மேலும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 500+ பவுண்டரிகள் மற்றும் 50+ சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா தக்க வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று (ஜன.15) நடந்த அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்மிருதி மந்தனா இதுவரை 10 சதங்களை அடித்துள்ளார். மேலும், இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்தின் டாம்சின் டில்லி பியூமொண்ட் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார். அதிக சத பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சுசி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.