திண்டுக்கல்:டிஎன்பிஎல் 8வது சீசன் சேலம், கோவை மற்றும் திருநெல்வேலியைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற டபுள் ஹெட்டரின் முதல் போட்டியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது.
191 இலக்கு:முன்னதாக, இந்த சீஸனில் ப்ளேஆஃப்ஸ் வாய்ப்பை ஏற்கனவே இழந்த சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் முதல் குவாலிஃபையர் போட்டிக்கான தங்களது இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை மோதினர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லோகேஷ்வர் மீண்டுமொரு முறை சிறப்பாக விளையாடி 40பந்துகளில் 55 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக ஜெகதீசன் கௌஷிக் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
மதுரையின் பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி இந்த
சீஸனில் தங்களின் அதிகபட்ச ஸ்கோரை கடைசி லீக்போட்டியில் பதிவு செய்தது. இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக நாராயண் ஜெகதீசன் - சந்தோஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் நாராயண் ஜெகதீசன் வெறும் 10 ரன்களுக்கு விக்கெட் இழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் 17 ரன்களுக்கு விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தார்.