சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு அரசியல்வாதிகளுக்கான ஒய் பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொண்ட பாதுகாப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரி அடங்கிய பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் அரசியல்வாதி என்ற முறையில் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிகிறது.