தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

திடீரென ஓய்வை அறிவித்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! - Shikhar Dhawan

shikhar dhawan retirement: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

ஷிகர் தவான்
ஷிகர் தவான் (Credit - shikhar dhawan X page)

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 10:04 AM IST

ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ள ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையான போட்டி தொடர்ந்து நிலவுவதாலும், இளம் வீரர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதாலும் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் இவர் தவித்து வந்தார்.

2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தவான், கடைசியாக 2022ல் வங்கதேசத்திற்கு எதிராக தமது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார். இந்த நிலையில் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

மனஅமைதியுடன் இருக்கிறேன்:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "எனக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருந்தது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் அது. அதை நான் செய்துவிட்டேன். எனது பயணத்தில் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நான் ஓய்வை அறிவிக்கிறேன். "எனது ஓய்வை அறிவிக்கும் இந்த தருணத்தில் மனஅமைதியுடன் இருக்கிறேன். ஏனெனில், நான் நாட்டுக்காக நிறைய விளையாடி இருக்கிறேன்.

எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டெல்லி கிரிக்கெட் அமைப்புக்கு நன்றி. அதேபோல் இத்தனை ஆண்டுகளாக அன்பை அளித்த ரசிகர்களுக்கும் நன்றி. தற்போது இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை என நான் வருத்தப்படவில்லை.

மாறாக பல ஆண்டுகளாக, இந்தியாவுக்காக ஆடியதே மகிழ்ச்சிதான். இது எனக்கு நானே சொல்லி கொள்ளும் விஷயம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும்போது எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன" என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள தவான் , 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்களும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்களும் குவித்துள்ளார்.

இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை விளாசியுள்ளார். இவரை பாரட்டும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்திய அணியில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக வளம் வந்த ஷிகர் தவான் ஓய்வை அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:லாசேன் டைமண்ட் லீக்: வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. இறுதி வாய்ப்பில் 89.49 மீ ஈட்டி எறிந்து அபாரம்!

ABOUT THE AUTHOR

...view details