கொல்கத்தா:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் விளாசினார். அதேபோல் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆந்திரே ரஸ்செல் 25 பந்துகளில் 7 சிக்சர் 3 பவுண்டரி என விளாசி 64 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய ஐதரபாத் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளெசன் (63 ரன்) மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினார். மற்ற வீரர்க்ள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் ஐதராபாத் அணி இறுதியில் தோல்வியை தழுவியது. 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.