தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

டி20 உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த இந்திய அணி, புயல், மழையில் சிக்கியதால் வெஸ்ட் இண்டீசில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இந்திய அணியை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி (credits- IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 1:34 PM IST

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 29ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பெரிக் புயல் தீவிரமடைந்தது. இப்புயல் பிரிவு-5 ஆம் வகையை சார்ந்த புயல் என்பதால் மணிக்கு 260 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பயிற்சி குழுவினர் பிரிஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதனால் ஜூலை 6ஆம் தேதி தொடங்கவுள்ள ஜிம்பாப்வே அணியுடன் மோதும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி தங்கியுள்ள பார்படாஸ் நகரில் இருந்து 570 கி.மீ தொலைவில் ஜூலை 1ஆம் தேதி 'பெரில்' புயல் மையம் கொண்டிருந்ததால். பிரிஜ்டவுன் விமான நிலையத்தின் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திட்டப்படி, இந்திய அணி பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் சென்று பின்னர் அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக டெல்லி விமான நிலையம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 'பெரில்' புயலால் இப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ஜூலை 2ஆம் தேதி பார்படாஸ் நகரில் புயல் கரையை கடந்தது. இருப்பினும் அங்கு இயல்பு நிலை இன்னும் திரும்பாததால் விமான சேவை தொடர்ந்து முடங்கி உள்ளது. இதனால் இந்திய அணி வீரர்களை தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இந்திய அணி நாளை காலை 6 மணி அளவில் டெல்லிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு திரும்பிய உடன், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

இதையும் படிங்க:ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன்!

ABOUT THE AUTHOR

...view details