மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான 21 போட்டிகள் கொண்ட முதல் கட்ட ஐபிஎல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 2வது கட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 49 போட்டிகளுக்கான இரண்டாவது கட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின் நடப்பு ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
மே 19ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்களில் நிறைவு பெறும் நிலையில், 2 நாட்கள் இடைவெளி விட்டு மே 21ஆம் தேதி முதலாவது தகுதிச் சுற்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அதேபோல், வெளியேற்றுதல் சுற்று மே 22ஆம் தேதி அதே அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது தகுதிச் சுற்று மே 24ஆம் தேதியும், இறுதிப் போட்டி மே 26ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஐபிஎல் சீசனை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. இரண்டாவது கட்ட அட்டவணையில் சென்னை அணி மோதும் ஆட்டங்களின் நாள், மற்றும் இடம் குறித்த தகவல் வாருமாறு:
ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆட்டம் நடைபெறுகிறது,
ஏப்ரல் 14ஆம் தேதி மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆட்டம் நடைபெறுகிறது,
ஏப்ரல் 19ஆம் தேதி லக்னோவில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் ஆட்டம் நடைபெறுகிறது,