தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND VS AUS: "ஆமா.. பும்ராவிடம் வம்பிழுத்தது என்னோட தப்பு தான்"..கொஞ்சம் லேட்டா ஒப்புக்கொண்ட ஆஸி. இளம் வீரர் கான்ஸ்டாஸ்! - IND VS AUS SYDNEY TEST

பார்டர் - கவாஸ்கர் டிராபியின் சிட்னி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவை கோபமூட்டும் விதத்தில் செயல்பட்டது தன் தவறுதான் என்று ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் ஒப்புக்கொண்டார்.

சிட்டி மைதானத்தில் மோதிக் கொண்ட கான்ஸ்டாஸ் மற்றும் பும்ரா
சிட்டி மைதானத்தில் மோதிக் கொண்ட கான்ஸ்டாஸ் மற்றும் பும்ரா (AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2025, 12:56 PM IST

ஹைதராபாத்: பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தமது முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கவாஜா - கான்ஸ்டாஸ் களமிறங்கினர். பும்ராவும், .சிராஜும் ஆக்ரோஷமாக பந்துவீசி கொண்டிருந்தனர். அவர்களின் அனல்பறந்த பந்துவீச்சை எதிர்கொள்ள கவாஜா- கான்ஸ்டாஸ் திணறிக் கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் ஆட்டம் முடிய 15 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், பும்ரா பந்துவீச முயன்றார். அப்போது பந்தை எதிர்கொள்ள வேண்டிய கவாஜா கடைசி நொடியில் கிரீசில் இருந்து திடீரென விலகினார். கவாஜாவின் இந்தச் செயலால் எரிச்சலடைந்த பும்ரா, தமது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்த (Non Striker End) கான்ஸ்டாஸ், பும்ரா -கவாஜா இருவருக்கும் இடையேயான தகராறில் குறுக்கிட்டதோடு மட்டமில்லாமல், சில தகாத வார்த்தைகளையும் உதிர்த்தார். இதனால் பும்ராவுக்கும், கான்ஸ்டாஸுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சக அணி வீரர்கள், நடுவர்கள் சமாதானம் செய்ததையடுத்து, பும்ரா மீண்டும் பந்துவீச்சை தொடர்ந்தார்.

இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்து சில நிமிடங்களிலேயே தான் வீசிய பந்தில் கவாஜா ஆட்டமிழக்க செய்து அவரை பெவிலியன் திரும்ப செய்தார் பும்ரா. கவாஜாவின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியை கான்ஸ்டாஸ் முன் கொண்டாடவும் செய்தார்.

இந்த நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியின்போது பும்ராவை கோபமடைய செய்தது தன் தவறுதான் என்று கான்ஸ்டாஸ் தற்போது ஒப்புகொண்டுள்ளார்.

"அன்றைய ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி முடிக்க நினைத்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக கவாஜா அவுட்டானார். கடைசி நிமிடத்தில் அவரை ஆட்டமிழக்க செய்ய பெருமை பும்ராவையே சேரும்." என்று கான்ஸ்டாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான கான்ஸ்டாஸ், தமது முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், இந்த நேர்மறையான கவனத்தை விட இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவிடம் களத்தில் வம்பிழுந்ததை போல, முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலியிடமும் மைதானத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு கோலி, கான்ஸ்டாஸின் தோள்பட்டையை நேருக்கு நேர் இடிக்க, அச்சம்பவம் பேசுபொருளானது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விராட் கோலிக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details