ஐதராபாத்:2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று ஆல் ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.
ரிஷப் பன்ட்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. முன்னதாக இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பர் ஸ்ரேயாஸ் ஐயர் 26 கோடி 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதுவே அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில், அதையும் தாண்டி ரிஷப் பன்ட் புது வரலாறு படைத்தார்.