தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டென்னிசில் இருந்து ரபேல் நடால் ஓய்வு! Rafael Nadal Announce Retirement! - RAFAEL NADAL RETIRED

தொழில்முறை டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Rafael Nadal (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 10, 2024, 3:31 PM IST

ஐதராபாத்: டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் தனது ஓய்வு முடிவை ரபேல் நடால் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.

மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினின் மலாகாவில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து நடால் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். நவம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நாக் அவுட் சுற்றில் ரபேல் நடால் விளையாட திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ரபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று ரபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரபேல் நடால் அதில், தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகள் தனது வாழ்நாளில் கடினமான ஆண்டுகள் என்றும் தன்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றும் நடால் வீடியோவில் பேசியுள்ளார். தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தி இருந்தார்.

நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார். 63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற பல்வேறு சாதனைகளை ரபேல் நடால் தன்னகத்தே வைத்துள்ளார்.

இதையும் படிங்க:1877க்கு பின் முதல் முறை! சாதனையில் சாதனை படைத்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி! Harry Brook - Joe root Records!

ABOUT THE AUTHOR

...view details