பாரீஸ்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் இன்று (ஆக 11) பாரீஸில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டை அணிந்து ஈபிள் டவர் முன் நின்று ஒலிம்பிக்கில் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த பதிவினை 'ஏடா மோனே' என்ற டயலாக் உடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஸ்ரீஜேஷ் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர். ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எதிரணியினரின் கோல்களை இந்திய அணி பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போது ஒலிம்பிக்கில் அனைத்து வகையான போட்டிகளும் முடிவடைந்து நிறைவு பெற்றுள்ளது. இந்த நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியினை ஏந்திச் செல்பவராகவும் ஸ்ரீஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.