பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, மாலை 6 மணி முதல் கனமழை, பலத்த இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பிரான்சின் வானிலை ஆய்வு மையம் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பெரிய புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த எச்சரிக்கையால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. புயல் தீவிரமடைந்து ஒரு மணி நேரத்திற்குள் 20 மில்லி மீட்டர் முதல் 40 மில்லி மீட்டர் வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.