பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று 11வது நாளில் இந்தியாவுக்கு சுமூகமாக இருந்தது. இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இருப்பினும், ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டியில் கிஷோர் குமார் ஜெனா வெளியேறியது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேநேரம் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று (ஆக.7) 12வது நாளில், இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி மீது தான் இருக்கப் போகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து காணலாம்.
கோல்ப்: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கோல்ப் வீராங்கனைகள் அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே ரவுண்ட்-1 போட்டியில் இன்று கலந்து கொள்கின்றனர். பெண்கள் ஒற்றையர் சுற்றில் அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் ஆகியோரும் மோதும் போட்டி மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது.
டேபிள் டென்னிஸ்: பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் இந்திய அணி காலிறுதியில் இன்று விளையாடுகிறது. இந்திய அணியில் அர்ச்சனா காமத், மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது.
தடகளம்: ஒலிம்பிக் போட்டியின் 12வது நாளில், இந்தியாவின் சூரஜ் பவார் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் மராத்தான் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இது தவிர, பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் முதல் சுற்றில் இந்தியாவின் ஜோதி யாராஜி ஹீட் 4 சுற்றில் பங்கேற்கிறார்.
மேலும் பிரவீன் சித்ரவேல் மற்றும் அப்துல்லா நரங்கோலிந்தே ஆகியோர் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் தகுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர். இது தவிர சர்வேஷ் அனில் குஷாரே ஆடவருக்கான உயரம் தாண்டுதல் தகுதிப் போட்டியில் கலந்து கொள்கிறார். இதனுடன், ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் விளையாட்டின் இறுதிப் போட்டியில் அவினாஷ் முகுந்த் சேபிள் களம் காணுகிறார். இறுதிப் போட்டியில் அவினாஷ் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரஜ் பவார் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்கும் மராத்தான் ரேஸ் வாக் ரிலே கலப்பு நிகழ்வு காலை 11:00 தொடங்குகிறது.