பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக்கின் தொடரின் 7வது நாளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் ஆடவர் ஒற்றையர் துடுப்பு போட்டியில் 5வது இடம் பிடித்து வெளியேறினார். பந்தைய தூரத்தை 7:02.37 மணி நேரங்களில் கடந்து தகுதி பெற அவர் தவறினார்.
அதேபோல் ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் கியூபா நாட்டை சேர்ந்த இடாலிஸ் ஓர்டிஸ் (Idalis Ortiz) என்பவரிடம் தோல்வியை தழுவி வெளியேறினார். பாரீஸ் ஒலிம்பிக் ஜூடோவில் 78 கிலோ பிரிவில் களமிறங்கிய துலிகா மான் வெறும் 28 விநாட்களில் கியூபா வீராங்கனையிடம் சரணடைந்தார்.
இதன் மூலம் துடுப்பு போட்டி மற்றும் ஜூடோவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிப்போனது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜூடோ விளையாட்டில் இந்தியா களம் கண்டது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் பதக்கம் வெல்ல தவறியது ஒட்டுமொத்த ஜூடோ ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்து உள்ளது.
அதேநேரம் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பந்தைய தூரத்தை 7:02.37 கடந்த அவர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் கால்இறுதிக்கு இந்திய வில்வித்தை அணி தகுதி! சாதித்தது எப்படி? - Paris Olympics 2024