பாரிஸ்:பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள், இந்திய நேரப்படி இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோளகமாகத் தொடங்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது ஒலிம்பிக் குழு.
குறிப்பாக பாரிஸின் திறந்தவெளி அரங்கில் ஒலிம்பிக் தொடக்க விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாககும். விழா தொடங்குவதற்கு முன்னரே, ஒரு சில போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வில்வித்தைக்கான தகுதி போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் அணி 2013 புள்ளிகள் பெற்று, காலிறுதி சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
அதாவது தகுதி சுற்றுப் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி, நேரடியாகக் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் அந்த வகையில் இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதில் பொம்மதேவரா தீரஜ் 681 புள்ளிகள் பெற்று, தனி நபர் தரவரிசையில் 4ஆம் இடம் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக தருந்தீரப் 674 புள்ளிகளுடன் 14வது இடத்தையும், பிரவின் ஜாதவ் 658 புள்ளிகளுடன் 39வது இடத்தையும் பிடித்தனர்.