ETV Bharat / sports

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வுக்கு காரணம் என்ன? - கேள்வியை தவிர்த்த சேவாக்! - VIRENDER SEHWAG

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்த கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் (@ashwinravi99, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 12:11 PM IST

கோயம்புத்தூர்: கிராமோத்சவம் விளையாட்டு ஐபிஎல் போட்டியை காட்டிலும் மிகப்பெரிய திருவிழா என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளனர்.

ஈஷா யோக மையம் சார்பில் ஆண்டு தோறும் கிராமோத்சவம் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் நடைபெற்றது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்ற போட்டியில் இந்த போட்டியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதில், ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அதன் இறுதிப் போட்டி கோவை, ஆலாந்துறை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ஈஷா யோகா ஆதியோகி சிலை முன்பு, அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில், நேற்று (டிசம்பர் 30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகையில், “ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சி தற்பொழுது 35 ஆயிரம் கிராமத்தில் நடைபெற்ற வருகிறது. வருங்காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஏழு லட்சம் கிராமத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற பகுதியில் இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாக இருந்தார்கள்.

தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் மூலமாக அனைவரும் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விளையாட்டு மூலம் யாரிடமும் ஜாதி மதம் பார்க்க முடியாது. இதனால் இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்ற ஏற்படும். இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைத் தடுக்காமல் அவர்களுக்கு புத்துணர்வும், விழிப்புணர்வும் கொடுத்தால் அவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங் கடேஷ் பிரசாத் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங் கடேஷ் பிரசாத் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, பேசிய கிரிக்கெட் வீரர் சேவாக், “கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம் மற்றும் தீவிரத்தை பார்க்கும்பொழுது ஆனந்தமாக உள்ளது. நாம் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10-15 நிமிடங்கள் செலவிட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பிரக்ஞானந்தா முதல் காசிமா, குகேஷ் வரை.. 2024 இல் சர்வதேச அளவில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகள்!

தொடர்ந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இது கிராமோத்சவம் திருவிழா, இதில் அஸ்வின் ஓய்வு குறித்து பேச முடியாது. தற்போது கிராமோத்சவம் போட்டியில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். கிராமோத்சவம் விளையாட்டு ஐபிஎல் போட்டியைக் காட்டிலும் மிகப்பெரிய திருவிழா” என பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், “ஐபிஎல் போட்டியை விட ஈஷா கிராமத்துப் போட்டி பெரியது. விளையாட்டு மூலம் அனைவருக்கும் ஒரு நல்ல ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும். இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு , துளசிமதி மற்றும்  சத்குரு ஜக்கி வாசுதேவ்
பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு , துளசிமதி மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் (ETV Bharat Tamil Nadu)

பின்னர், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் பேசுகையில், “2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்றபோது, விளையாட்டில் ஆர்வம் இருந்ததை விட, தற்பொழுது அதிக அளவில் பாரா விளையாட்டில் கலந்து கொள்வதற்கு வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஈஷா கிராமோத்சவம் மூலமாக அதிகளவில் வீரர்கள் போட்டியில் பங்கேற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் வீராங்கனை துளசிமதி பேசுகையில், “16-வது ஈஷா கிராமோத்சவம் அழைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாரா விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் காட்டுகின்றனர். நான் கிராமப்புறத்திலிருந்து வந்து விளையாட்டில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். அதேபோல், அனைவரும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.