ஹைதராபாத்:2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓப்பன் டென்னிஸ் போட்டி விளையாடச்சென்றபோது தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது தாம் தங்கியிருந்த ஹோட்டலில் தமக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்று காலகட்டத்தின்போது 2022ஆம் ஆண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது என்று நோவக் ஜோகோவிச்கூறியதால், அப்போது ஆஸ்திரேலியாவில் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. அவர் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவர் மெல்போர்ன் நகரில் உள்ள விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனவே அவர் நாடுகடத்தப்பட்டு அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அப்போது இதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். இது அந்த காலகட்டத்தில் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்களுக்கு என பிரத்யேகமாக வெளியவரும் GQ என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், "ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விடுதியில் தங்கியிருந்தபோது எனக்கு சில உடல் நலக்குறைவுகள் நேரிட்டன. விஷம் கலந்த உணவு எனக்குக் கொடுக்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட பின்னர் எனக்கு கடும் காய்ச்சல் நேரிட்டது. எனவே நான் சாப்பிட்ட உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.