தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை, புதுச்சேரியில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்! ஒரு தமிழக வீரர் கூட இல்லை? - India vs Australia Series - INDIA VS AUSTRALIA SERIES

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Representational Image (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Sep 2, 2024, 1:40 PM IST

ஐதராபாத்:ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 நான்கு நாட்கள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.

தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முறையே 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகின்றன. அதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் நடைபெறுகிறது.

முதலாவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 7 முதல் 10 வரையிலும் சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. நான்கு நாட்கள் போட்டிக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது அமான் கேப்டனாகவும், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோஹம் பட்வர்தன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் தொடர் நடைபெறும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருநாள் மற்றும் 4 நாட்கள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவரின் பெயர் கூட இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ருத்ரா படேல் (விக்கெட் கீப்பர்), சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் ஷர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத், முகமது எனான்.

4 நாட்கள் தொடருக்கான இந்திய அணி: வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேயா கே பி, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர்), சேத்தன் ஷர்மா, சமர்த். என், ஆதித்யா ராவத், நிகில் குமார், அன்மோல்ஜீத் சிங், ஆதித்யா சிங், முகமது எனான்.

இதையும் படிங்க:ரோகித், பும்ராவுக்கு நோ.. சூசகமாக சொன்ன கம்பீர்! என்ன நடந்தது? - Gautam Gambhir All Time India XI

ABOUT THE AUTHOR

...view details