ETV Bharat / state

தீவுக்கு ஜாலி பயணம்.. பல பல சேவைகள்.. சென்னை ஏர்போர்ட்டில் 2024 இல் நடந்த 'ட்விஸ்ட்' அண்ட் 'டர்ன்ஸ்'! - CHENNAI AIRPORT 2024 ROUNDUP

இந்தியாவில் உள்ள மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை ஏர்போர்ட், கடத்தல் குரங்கு, விமானங்கள் கோப்புப்படம்
சென்னை ஏர்போர்ட், கடத்தல் குரங்கு, விமானங்கள் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2024, 1:04 PM IST

Updated : Dec 29, 2024, 1:11 PM IST

சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் சென்னை விமான நிலையத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய விமான சேவை:

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு 500 விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்டது. ஆனால் கரோனோ பரவலுக்குப் பிறகு அனைத்து விமான சேவைகளும் இயக்கப்படாமல் இருந்தது.

சென்னை ஏர்போர்ட் முகப்பு
சென்னை ஏர்போர்ட் முகப்பு (credit - ETV Bharat Tamil Nadu)

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் 4 ஆண்டு கழித்து மீண்டும் தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹாங்காங் - சென்னை- ஹாங்காங் இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு வாரத்தில் ஏழு நாட்களும் தினசரி விமான சேவைகளாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு ஏர் மொரிஷியஸ் விமான சேவைகள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், தொழில் முனைவோர்கள் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

அதேபோல் கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை - ஜெட்டா இடையேயான விமான சேவை 4 ஆண்டுகள் கழித்து, சென்னை ஜெட்டாயிடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சவுதி ஏர்லைன்ஸ் விமானம் திங்கள், புதன் ஆகிய தினங்களில் சென்னை - ஜெட்டா இடையே நேரடி விமான சேவை இயக்கி வருகிறது.

கூடுதல் விமான சேவை:

சென்னையில் இருந்து குவைத்துக்கு இதுவரை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ், ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்கள் சென்னை- குவைத்- சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகளை இயக்கி வந்தன. இந்த நான்கு விமானங்களிலுமே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம் (credit - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை- குவைத்- சென்னை இடையே புதிய பயணிகள் விமான சேவையை தொடங்கியது. இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வாரத்தில் 5 நாட்கள் செவ்வாய், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, சென்னை- பாங்காக்-சென்னை மற்றும் சென்னை- தமாம்- சென்னை ஆகிய இரு வழித்தடங்களில் புதிய விமான சேவைகளும், உள்நாட்டு முனையத்தில் சென்னை-துர்காப்பூர்- சென்னை இடையே புதிய விமான சேவைகளும், கூடுதல் விமான சேவைகளாக தொடங்கப்பட்டன.

புதிய விமான சேவைகள் தொடக்கம்:

மலேசிய நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு, மலேசியாவில் உள்ள பல்வேறு தீவுகளில் மிகப்பெரிய தீவாக உள்ளது. இங்கு பெருமளவு தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பினாங்கு தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. பினாங்கு தீவிற்கு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.

இதையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பினாங்கிற்கு நேரடி தினசரி விமானத்தை இயக்க தொடங்கியது.

சென்னை - புருனே விமான சேவை
சென்னை - புருனே விமான சேவை (credit - @aaichnairport X account)

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி முதல் புருனே நாட்டின் பந்தர் செரி பேகவான் நகர் மற்றும் சென்னை இடையே புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் இன் ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் ஒரு வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் மக்கள் வருகை அதிகரிக்கும் போது வாரம் முழுவதும் செயல்படுத்தபடும் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புகட் நகருக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் தாய் ஏர் ஏசியா விமானம் நேரடி விமான சேவையை புதிதாக இயக்கி வருகிறது. புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு மூன்று தினங்கள் இந்த விமான சேவைகள் சென்னையிலிருந்து புகட் நகருக்கு இயக்கப்படுகிறது.

பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு:

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தாண்டு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்தது, தற்போது ரூ. 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு அதிக பட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களும், கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை இருந்த பழைய கட்டணம் ரூ.30, இப்போது ரூ.35 ஆகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95, இப்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்க பிரிவில் கூடுதல் மோப்ப நாய்கள்:

சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், ஆயுதங்கள், அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்கள், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கடத்தல்களை கண்டுபிடிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் கே 9 எனப்படும் மோப்ப நாய்கள் ஸ்குவாட் உள்ளது. அதில் தற்போது ஆர்லி, ஆரியோ, ஸ்னோ பாய், ராக் என்ற 4 மோப்ப நாய்கள் உள்ளன. இவைகள் வெடி மருந்துகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவைகளை திறமையாக கண்டுபிடிக்கின்றன.

கடத்தல் குரங்கு
கடத்தல் குரங்கு (credit - ETV Bharat Tamil Nadu)

ஆனால், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்களை கண்டுபிடிப்பதற்கு, திறமையான மோப்ப நாய்கள் இல்லை. இந்த குறையை போக்குவதற்கு, சென்னை விமான நிலையத்தின் கே 9 மோப்ப நாய் ஸ்குவாட் பிரிவுக்கு மேலும் 3 மோப்ப நாய்கள் வரவிருக்கின்றன. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் கே9 ஸ்குவாடு பிரிவிற்கு, மோப்ப நாய்களின் எண்ணிக்கை, 4 இல் இருந்து 7 ஆக அதிகரிக்க இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு அதிக அளவில் பயணிகள் விமானப் பயணம்

சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 18,53,115 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17,53,115 பயணிகள் மட்டுமே பயணித்து உள்ளனர். எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 90,222 ஆக அதிகரித்துள்ளது.

அதைப்போல், கோவை விமான நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 2,70,013 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,53,814 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16,199 அதிகரித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 1,68,668 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,43,104 மட்டுமே பயணித்துள்ளனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை 25,564 அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 19,237 பேர் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு 16,526 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பயணிகளின் எண்ணிக்கை 2,711 அதிகரித்துள்ளது.

ஆனால், சென்னை சர்வதேச முனையத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 4,86,177 பயணிகள் பயணித்துள்ளனர். ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4, 94,796 பயணிகள் பயணித்துள்ளனர். எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8,619 பயணிகள் குறைவு. இது மைனஸ் 1.8% ஆகும்.

சென்னை உள்நாட்டு விமானம் முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகையில், சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவடைந்தது, அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் கடத்தல்கள்:

சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுகிறது.

கடத்தல் தங்க கட்டிகள்
கடத்தல் தங்க கட்டிகள் (credit - ETV Bharat Tamil Nadu)

அதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தாய்லாந்து உட்பட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சிகள் அதிகமாக கடத்தப்படுகின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரை சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தங்கம், போதைப் பொருள்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளின் விவரம்;

தங்கம் பறிமுதல்:

சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 878 பயணிகளிடம் இருந்து, 344 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.184.70 கோடியாகும். அதேபோல், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 132 பேரிடம் இருந்து (ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒரே விமானத்தில் 113 பேர்) 96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.64 கோடியாகும். ஒட்டு மொத்தமாக 440 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.248 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பறிமுதல்:

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனைகளில், 2023-2024 ஆம் ஆண்டில் கொக்கைன், ஹெராயின், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட 42.68 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.192 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் ஆமைகள்
கடத்தல் ஆமைகள் (credit - ETV Bharat Tamil Nadu)

வெளிநாடு கரன்சி:

சுங்கத்துறை 2023-2024ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு 19.44 கோடி ரூபாய் ஆகும்.

அரிய வகை விலங்குகள்:

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் 18 வழக்குகளில், சுமார் 150-க்கும்‌ மேற்பட்ட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த உயிரினங்கள் எந்த நாடுகளிலிருந்து வந்ததோ, அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான நட்சத்திர ஆமைகள், சிவப்பு காது ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, கடத்தி கொண்டுவரப்பட்ட நாட்டிற்கு விமான மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் சுங்கத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

உயர் ரக கஞ்சா
உயர் ரக கஞ்சா (credit - ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் உயர் ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னை சேர்ந்த பெண் பயணி ஒருவர் 2.8 ஒரு கிலோ மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்து கைதானார். இதையடுத்து இம்மாதம் 16ஆம் தேதி ரூ.76 லட்சம் மதிப்புடைய 7.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். மூன்றாவது மேலும் ஒரு சென்னை பயணி ரூ.3.6 கோடி மதிப்புடைய உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

267 கிலோ கடத்தல் தங்கம், இருவர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் பெருமளவு குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சுங்கச் சோதனைகள் இல்லாமல் கடத்திச் செல்லப்பட்டன.

இந்த இரண்டு மாதங்களில், ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை கடையை நடத்தும் யூடியூபர் சபீர் அலியும், அவருடைய கடையில் பணியாற்றும் 7 ஊழியர்களும் உடந்தை என்று தெரிய வந்தது.

போதை பொருள் உள்ளடக்கிய கேப்சூல்
போதை பொருள் உள்ளடக்கிய கேப்சூல் (credit - ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து சுங்க அதிகாரிகள், சபீர் அலி, கடை ஊழியர்கள் 7 பேர், இலங்கை பயணி ஒருவர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Last Updated : Dec 29, 2024, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.