நியூசிலாந்து: தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்.4 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 511 என்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 162 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர் நீல் பிராண்ட் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரூவான் டி ஸ்குவார்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா 2 சதங்களையும், வில்லியம்சன் சதத்தையும் விளாசினார்.
டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் சதம் விளாசினார். இந்த அபார ஆட்டத்தின் மூலன் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 5 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன், கிளென் டர்னர், ஜியாஃப் ஹோவார்த், ஆண்ட்ரூ ஜோன்ஸ், பீட்டர் ஃபுல்டன், ஆகியோர் சதம் விளாசினார்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸ்ஸில் இரட்டை சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 26 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 528 ரன்கள் முன்னிலை வகித்தது. களத்தில் மிட்செல் மற்றும் டாம் பெண்டல் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் ஓவர் நைட் டிக்ளரேசன் (Declaration) நடந்தாக தெரிகிறது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்கமாக எட்வர்ட் மூர் - நீல் பிராண்ட் ஜோடி களம் கண்டது. வந்த வேகத்திலே மூர் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பிச் சென்றார். அதன்பின் ரேனார்ட் வான் டோண்டர் களத்தில் இறங்கினார். 3 ஓவர் முடிவிற்கு 5-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.
4வது ஓவரில் மூர் தனது விக்கெட்டை இழக்க, சுபைர் ஹம்சா களம் கண்டு விளையாடினார். 10ஓவர் கழித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு ஹம்சா பவுண்டரியைப் பதிவு செய்தார். 20ஓவர் முடிவிற்கு 39-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.
ரேனார்ட் வான் டோண்டர் - சுபைர் ஹம்சா ஜோடி இணைந்து அணிக்கு ரன்களை குவித்தனர். 25 ஓவர் முடிவிற்கு 59-2 என்ற கணக்கில் விளையாடியது. 31வது ஓவரில் வான் டோண்டர் ஜேமிசன் வீசிய பந்தை லாதமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டோண்டர் 83 பந்துகளுக்கு 2 பவுண்டரிகளை விளாசி 31 ரன்கள் எடுத்தார்.
ஹம்சாவுடன் டேவிட் பெடிங்காம் இணைந்தார். 33வது ஓவரில் ஹம்சா அவுட் ஆனார். 92 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள் வீதம் 36 ரன்கள் எடுத்தார். டேவிட் பெடிங்காம் - கீகன் பீட்டர்சன் ஜோடி அணிக்கு சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 35வது ஓவரில் 3 பவுண்டரிகளை பெடிங்காம் விளாசி அசத்தினார்.