ஹாமால்டன் (நியூசிலாந்து): தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த பிப்.13ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 242 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி 211 ரன்களைப் பெற்று, 31 ரன்கள் பின்னடவைச் சந்தித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணி நேற்று (பிப்.15) தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்கா அணி 235 ரன்களைக் குவித்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம் - கான்வே ஜோடி விளையாடியது. 2வது ஓவரில் கான்வே தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 5 ஓவர் முடிவிற்கு 12-0 என்ற கணக்கில் விளையாடியது. 9வது ஓவரில் டாம் லாதம் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 10 ஓவர் முடிவிற்கு நியூசிலாந்து அணி 32-0 என்ற கணக்கில் விளையாடியது.
14 ஓவரில் கான்வே டிபெடிட் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். அதன்படி, மூன்றாவது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்களைக் குவித்தது. களத்தில் டாம் லாதம் இருந்தார்.
இந்நிலையில், நான்காவது நாளான இன்று (பிப்.16), வில்லியம்சன் களத்தில் இறங்கி விளையாடினார். 20வது ஓவரில் டாம் லாதம் தனது விக்கெட்டை இழந்தார். பின், ரச்சின் ரவீந்திரா களம் கண்டார். 21வது ஓவரில் வில்லியம்சன் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார்.