ஹாமில்டன் (நியூசிலாந்து): தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(பிப்.13) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக நீல் பிராண்ட்-ஃபொர்ட்டின் ஜோடி களமிறங்கியது. இதில் ஃபொர்ட்டின் பிலிப்ஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வோன் டோன்னர் களமிறங்கினார். 6 ஓவர் முடிவிற்கு 14 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற கணக்கில் விளையாடியது. நீல் பிராண்ட் தனது முதல் பவுண்டரியை 7வது ஓவரில் விளாசினார். 10 ஓவர் முடிவிற்கு 28-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.
12வது ஓவரில் நீல் பிராண்ட் வில்லியம் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். இதுவே வில்லியமிற்கு டெஸ்ட் போட்டியின் முதல் விக்கெட் ஆகும். பின், சுபைர் ஹம்சா களம் கண்டார். 20 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா அணி 58-2 என்ற கணக்கில் விளையாடியது. அடுத்த 5 ஓவர்களுக்கு பெரிதாக ரன்கள் ஏதுமில்லை. 25 ஓவர் முடிவிற்கு 63-2 என்ற கணக்கில் விளையாடியது.
26வது ஓவரில் வோன் டோன்டர் விக்கெட்டை வாக்னர் எடுத்தார். வோன் டோன்டர் 71 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின் டேவிட் பெடிங்காம் களம் இறங்கினார். 31வது ஓவரில் ஹம்சா அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். அடுத்த 10 ஓவர்களுக்கு அணிக்கு சொற்ப ரன்கள் மட்டுமே கிடைத்தது.
46வது ஓவரில் சுபைர் ஹம்சா அவுட் ஆக, கீகன் பீட்டர்சன் களம் கண்டார். 46ஓவர் முடிவிற்கு 101-4 என்ற கணக்கில் விளையாடியது. வந்த வேகத்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார் கீகன். பின்னர், ரூவான் டி ஸ்குவாரட் களமிறங்க, இருவரும் பார்டனர் போட்டு அணிக்கு ரன்களை குவித்தனர். 62வது ஓவரில் பெடிங்காம் அவுட் ஆனார். இவர் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின் வோன் பெர்க் களமிறங்கி டெஸ்ட் போட்டியில் தனது முதல் ரன்னை பதிவு செய்தார்.
75ஓவர் முடிவிற்கு 176-6 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. 90 ஓவர் முடிவிற்கு 220-6 என்ற கணக்கில் விளையாடியது. 92வது ஓவரில் வோன் பெர்க் விக்கெட்டை வில்லியம் வீழ்த்தி அசத்தினார். பின் டேனி களத்தைச் சந்திக்க 95வது ஓவரில் ஆட்டத்தை இழந்து சொற்ப ரன்களில் வெளியேறினார்.
அதன்பின், மூர்கி விளையாடினார். 97வது ஓவரில் ரூவான் டி ஸ்குவார்ட் அவுட் ஆக டேனி பேட்டர்சன் களமிறங்க, வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில், வில்லியம் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும், சவுத்தி, மாட் ஹென்றி, வாக்னர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.