லக்னோ: ஐபிஎல் தொடரின் 21வது போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ ஜெயண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக, கே.எல்.ராகுல், குயின் டிக் காக் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில் குயின் டிக் காக் சிக்ஸ் அடித்தார். அதே வேகத்தில் அவுட் ஆனார். பின்னர், தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்.
தேவ்தத் படிக்கல் - கே.எல்.ராகுல் ஜோடி விளையாடியது. இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்க்கும் என எதிர்பார்த்த நிலையில், படிக்கல் 7 பந்துகளுக்கு 7 ரன்களை மட்டும் எடுத்து அவுட் ஆனார். களத்தில் கே.எல்.ராகுல் உடன் மார்கஸ் ஸ்டோனிஸ் இணைந்தார். இருவரும் கூட்டணி போட்டு அணிக்கு ரன்களைக் குவித்தனர்.
பவர் ப்ளேவில் ராகுல், ஸ்டோனிஸ் ஆகிய இருவரும் மாறி பவுண்டரிகளைப் பறக்க விட்டனர். இந்த கூட்டணியை உடைக்க முடியாமல் எதிர் அணியினர் போராடினர். 7 ஓவர் முடிவிற்கு 54-2 என்ற கணக்கில் லக்னோ அணி விளையாடியது.
கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் திவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் நிக்கோலஸ் பூரன் களம் கண்டார். 14 ஓவர் முடிவிற்கு 98-3 என்ற கணக்கில் லக்னோ அணி விளையாடியது.
15வது ஓவரில் ஸ்டோனிஸ் தனது அரை சதத்தைப் பதிவு செய்த வேகத்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஆயுஷ் படோனி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 163 ரன்களைச் சேர்த்தது. இந்த முதல் இன்னிங்ஸ்ஸில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:MI Vs DC: நடப்பு சீசனில் முதல் வெற்றி! சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடிய மும்பை! - IPL 2024