டெல்லி:இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு குறித்த கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜூலை மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம். லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை மாதம் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி, எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நம்ப முடியாத தருணங்களை எண்ணி நெகிழ்ச்சி அடைகிறேன்.
சிறுவயதில் இருந்தே நான் விரும்பிய விளையாட்டை விளையாடுகிறேன், நான் இங்கிலாந்து அணியை விட்டு வெளியேறுவதை மிகவும் இழப்பாக கருதுகிறேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதையும், அவர்களது கனவு நனவாக நான் இடையூறாக இருக்க விரும்பாமல் சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதையே விரும்புகிறேன்.
எனது பெற்றோரின் அன்பும் ஆதரவும் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அவர்களுக்கு மிகவும் நன்றி. மேலும், இதை உலகின் சிறந்த பணியாக மாற்றிய சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கொள்ளும் புதிய சவால்களை நோக்கி பயணிப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும் பல ஆண்டுகளாக என்து கிரிக்கெட் பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. பல்வேறு நேரங்களில் தொடர்ந்து விளையாடத சூழலிலும் எனக்கு ஆதரவு அளித்து வந்த அனைவருக்கும் நன்றி" என்று அந்த பதிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்து உள்ளார். அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில் கலந்து கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இன்னும் 9 விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஷேன் வார்னேவின் சாதனையை ஆண்டர்சன் முறியடிப்பார். கடந்த 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், கடந்த 20 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் 32 முறை 10 விக்கெட்டுகள வீழத்தி உள்ளார்.
இதையும் படிங்க:ரிஷப் பன்ட் ஒரு போட்டியில் விளையாட தடை- ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு! என்ன காரணம்? - Rishabh Pant Suspend