ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் இன்று ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கேதர் ஜாதவ் 2004இல், மகாராஷ்டிரா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், மகாராஷ்டிரா அணிக்காக 2012ஆம் ஆண்டில் ரஞ்சிக்கோப்பை தொடரில் 327 ரன்கள் பதிவு செய்தார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரசிகர்கள் கவனத்தைப் பெற்றார்.
பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக களமிறங்கினார். சென்னை அணிக்காக விளையாடிய போது ஒரு சில போட்டிகளில் ஜாதவ் பொறுமையாக விளையாடியதாகவும், அதனால் ஆட்டம் கைவிட்டு போனதாகவும் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். அதே நேரத்தில், 2014இல் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கினார். மேலும், 2019 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.