உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகரில் நடைபெற்று வரும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் (National Games 2025), 10 மீட்டர் ஏர் ரைஃபிள் (10m Air Rifle) பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ஜோனாதன் ஆண்டனி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் நடப்பு போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் சவுரப் சவுத்ரி ஆகியோரை வீழ்த்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இளம் துப்பாக்கி சுடும் வீரரான ஜோனாதன் ஆண்டனி 2022 ஆம் ஆண்டு நடந்த CBSE தெற்கு மண்டல ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அந்த போட்டியில் இருந்து அவரது துப்பாகி சுடும் போட்டியின் மீதான ஆர்வம் இன்று சர்வீசஸ் வீரர்களான ரவீந்தர் சிங் (வெள்ளி, 240.3) மற்றும் குர்பிரீத் சிங் (வெண்கலம், 220.1) ஆகியோரை வீழ்த்தி கர்நாடகாவிற்காக 240.7 புள்ளிகள் பெற்று கொடுத்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இந்த போட்டியின் புள்ளிகள் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கின் சாதனைகளை ஜோனாதன் ஆண்டனி முறியடித்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.