தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நாளை குவாலிபையர் 1ல் KKR vs SRH.. மழை பெய்தால் ரிசர்வ் டே உள்ளதா? - srh vs kkr - SRH VS KKR

SRH VS KKR: நாளை அகமதாபாத்தில் குவாலிபையர் 1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.

IPL Qualifier 1 SRH VS KKR
IPL Qualifier 1 SRH VS KKR (Credit: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 10:10 PM IST

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி அடைந்திருக்கிறது.

இதில் குவாலிவையர் 1ல் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளும், எலிமினேட்டரில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளும் மோதுகின்றன. இந்நிலையில், நாளை (செவ்வாய்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குவாலிபையர் 1ல் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதவிருக்கின்றன.

இப்போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அதேசமயம் தோற்கும் அணி எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடும். இதுதான் பிளே ஆஃப் சுற்றின் விதிமுறை.

கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றில்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2011, 2012, 2014, 2016, 2017, 2018, 2021 என இதுவரை 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் 2012 சென்னை அணிக்கு எதிராகவும், 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராகவும் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றில்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2013, 2016, 2017, 2018, 2019, 2020 என இதுவரை 6 முறை பிளே ஆஃப் சுற்றிக்கு முன்னேறி விளையாடி உள்ளது. அதில் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இறுதி போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த சீசனில் ஹைதராபாத் - கொல்கத்தா: இந்த சீசனின் அந்த அணிகளின் முதல் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 208 ரன்கள் விளாசி இருந்தது. அதனை விரட்டிய ஹைதராபாத் அணி 204 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரு அணிகளிலுமே பேட்டிங் மிகவும் பலமாக பார்க்கப்படுகிறது. எனவே நாளைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு அணிகளும் 26 முறை மோதி இருக்கிறது. அதில் கொல்கத்தா 17 முறையும் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மழை பெய்தால் ரிசர்வ்டே உள்ளதா: பிளே ஆஃப் போட்டிகளில் போட்டியானது மழையால் தடைப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரத்தை விட இரண்டு மணி நேரம் கூடுதலாக அளிக்கப்படும். இந்த நேரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்கலாம். ஒருவேளை இந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளும் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் ரிசர்வ் டே அளிக்கப்படும்.

இந்த ஆண்டு ஒவ்வொரு பிளே ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் டே உள்ளது. ரிசர்வ் டேயான அன்றும் மழை பெய்து போட்டி தடைப்பட்டால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்று இருந்ததோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

சூப்பர் ஓவர்: பிளே ஆஃப் போட்டி டிராவானால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஒருவேளை சூப்பர் ஒவரும் டிராவானால் அல்லது கூடுதல் நேரத்தின் காரணமாக நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விதிமுறைகள் அனைத்தும் இறுதி போட்டிக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க:“இது தனிமனித மீறல்..” ரோகித் சர்மா ஆத்திரத்தின் பின்னணி என்ன? - Rohit Sharma

ABOUT THE AUTHOR

...view details